Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் கட்டணம் குறைவு….. மக்களுக்கு அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை, கோவை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள்ண் தொடர் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ரயில், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பண்டிகை காலங்களில் குவியும் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை அடிப்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

அதன்படி தற்போது தொடர் விடுமுறை நாட்கள் ஆய்த பூஜை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 2,3 மடங்கு அதிகரித்து உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆயுத பூஜை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விடுமுறை, பொங்கல், தீபாவளி மற்றும் பிற விடுமுறை நாட்களில் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து கண்காணிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து முன்பு விதிக்கப்பட்ட விலையை விட 20% முதல் 10% ஆம்னி பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்னி பஸ் கட்டணம் தொடர்பான ஆய்வில் அதிகாரிகள் தொடர்ந்து பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |