சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ரேடியோ சாலைப்பகுதியில் 2 தண்ணீர் லாரிகள் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றனர். அப்போது அனுமதி இல்லாமல் தண்ணீர் பிடிக்கப் பட்டதாக கூறி பல்லாவரம் வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இரண்டு தண்ணீர் லாரிகளை சிறை பிடித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன் பிறகு முந்தைய ஆட்சி காலத்தில் 2020 ஆம் ஆண்டு மூன்று மாத காலம் மட்டும் தண்ணீர் எடுக்க அனுமதி வாங்கிவிட்டு தற்போது வரை வழங்கப்பட்ட அனுமதியை புதுப்பிக்காமல் தொடர்ச்சியாக நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம் கூறியது, அனுமதியை நீட்டிப்பதற்காக அதிகாரிகளை அணுகிய போது உரிய பதில் தராமல் இழுத்தடிப்பு செய்கின்றனர் என்று குற்றசாட்டை கூறியுள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கரணை ரேடியோ சாலையில் உள்ள திருமண மண்டப ஒன்றில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சங்க தலைவர் நிஜலிங்கம் வருகின்ற 7 ஆம் தேதி திங்கட்கிழமை வரை 25 ஆயிரம் தனியார் தண்ணீர் லாரிகள் ஓடாது என்று அறிவித்துள்ளார். மேலும் எங்களுக்கு முறையான அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.