தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்ளுக்கு அக்-25 மற்றும் 26ம் தேதிகளில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு படைப்பாற்றலை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையிடம் கொண்டு சேர்க்கக் கூடிய வகையில் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படும். இந்தப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படுவதால் அனைத்து பள்ளிகளிளும் கலந்துகொள்ளலாம். இதில் வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம் மற்றும் காண்கலை போன்ற நான்கு தலைப்புகளில் கலா உத்சவ் போட்டிகள் நடைபெறும்.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டிகள் நடத்தப்படவில்லை. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருவதால் மீண்டும் போட்டிகள் நடத்தினால் மாணவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பெறும் பள்ளி, சுயநிதி பள்ளி, மெட்ரிக் பள்ளி மற்றும் சிபிஎஸ்சி போன்ற அனைத்து பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்கள் பங்கேற்கலாம்.
இந்த போட்டியில் பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் போட்டி நடைபெறும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கலா கலா உத்சவ் போட்டியில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 2 மாணவிகள் மற்றும் 1 மாணவர் மாநில அளவில் வெற்றி பெற்றார். அதனைப் போலவே இந்த ஆண்டும் அதிக அளவிலான மாணவ மாணவிகள் வெற்றி பெறும் அளவிற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.