திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 12 கட்டிடங்கள் திறப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சுவாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் வினித் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை தமிழகம் முதல்வர் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து 8 ஆண்டுகளாக புதிதாக எந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையங்களும் அமைக்கப்படவில்லை. தற்போது மத்திய அரசின் ஒத்துழைப்புடன் 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்புற சுகாதார நிலையங்களும் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், காங்கேயம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த ரூ.12 அடி மதிப்பில் இந்த மாதம் பொது பணித்துறை சார்பில் பணிகள் துவங்கப்படும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக தாராபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 15 ஆம் தேதி இந்த பணிகள் துவங்கும். இதனையடுத்து டெல்லியில் நகர்புற நல்வாழ்வு மையங்கள் சிறப்பாக செயல்படுவது போல 110 அறிவிப்பின் கீழ் தமிழக முதல்வர் அறிவித்தார். 708 புதிய சுகாதார மருத்துவமனை கட்டிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் நகராட்சியில் 36 மருத்துவமனைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரம் செய்வது சாத்தியமற்றது. முறையாக தேர்வின் அடிப்படையில் பணியில் சேர்ப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும். நீதிமன்றமும் இதையே வலியுறுத்துகிறது என்றுஅவர் தெரிவித்துள்ளார்.