தமிழகம் முழுவதும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அரசு முக்கிய இடங்கள், அதிக மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் இது போன்ற வேறு சில பகுதிகளில் இலவச பொதுக் கழிப்பறைகளை ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் கழிப்பறை தேவை உள்ள மக்கள் அவற்றை எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அரசு திட்டமிட்டது. மேலும் சுற்றுப்புறமும் அசுத்தங்கள் இல்லாமல் தூய்மையாக இருக்கும். ஆனால் இந்த இலவச பொதுக் கழிப்பறைகளில் சிலர் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து அரசு புகார் வந்தது. இதனால் முன்னதாக அரசு இதைப்பற்றிய ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது சென்னை மாநகராட்சிக்கு உள்ளிட்ட திரு.வி.க. நகர் மண்டல வார்டு 70-க்கு உட்பட்ட குளக்கரை இணைப்பு சாலை, மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் தேனாம்பேட்டை மண்டலம் வார்டு 125 காமராஜர் சாலை ஆகிய மூன்று பகுதிகளில் மீண்டும் பொது கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று புகார் அரசுக்கு வந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதற்காக மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களில் கட்டணமில்லா பொதுக்கழிப்பிடம் என பெயர் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இஆனாலும் இவ்வாறு கட்டணம் வசூலிக்கப்படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்ததால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.