Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க…. மா. கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை….!!!!

தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி நெல்லை கொள்முதல் செய்வதற்கு கமிஷன் வசூலித்து வரும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குரும்பிவயல் கிராமத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.

இதனால் விவசாயிகள் விஷம் குடிக்க முயன்றது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் நடந்து வந்தது. இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் விவசாயிகள் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரும் நெல் முழுமையாக கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்திருந்தும் நெல் கொள்முதல் செய்யப் படாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து இருப்பது உணவு அதிகாரிகளின் அலட்சியம் என்று கூறப்படுகிறது.

இதனால் தமிழக அரசு விவசாயிகள் உற்பத்தி செய்துள்ள நெல்லை தங்கு தடையில்லாமல் கொள்முதல் செய்யவும் மற்றும் மழையில் நனைந்த நெல் மூட்டைகளை அரசே பொறுப்பு ஏற்று முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வதற்கு கமிஷன் வாங்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழக அரசு அனைத்து பகுதிகளில் உள்ள நெல் நிலையங்களை திறந்து விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |