தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் விலையில்லா மிதிவண்டி திட்டம் மூலம் 6.35 லட்சம் பணம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். இதற்காக தமிழக அரசு ரூ.323 கோடியே 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான விலையில்லாம் மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் சென்னையில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் கமுதி வட்டம், கமுதி நீராவி, ராமசாமி பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் இன்று பள்ளி கல்வித்துறையின் மூலம் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.
அதன் பிறகு பேசிய அவர், ஒருவரின் வாழ்க்கைக்கு கல்வி மிக முக்கியமானதாகும். ஒரு மனிதனுக்கு கல்வி ஒன்றே நிலையான சொத்தாகும். ஒருவர் முழுமையான கல்வி பெறுவதன் மூலம் அவர்களுடைய பொருளாதாரம் தானாக வளர்ச்சி பெரும், அந்த அளவிற்கு கல்வி மிக முக்கியமான ஒன்றாகும். இந்த கல்வியை வசதி படைத்தவர்களுக்கு இணையாக வறுமையில் உள்ளவர்களும் முழுமையாக கல்வியைப் பெற்று பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அதே வழியில் ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் அவர்கள், பள்ளி கல்வித்துறைக்கு மற்ற துறைகளை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு வழங்கி, அனைவருக்கும் உயர் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். இன்று பள்ளி கல்வித்துறையில் தமிழலகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்றால் அது தமிழக முதல்வர் அவர்களின் திட்டங்களை காரணமாக காரணமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.