தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வளிமண்டலத்தின் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மயிலாப்பூர் 20 சென்டி மீட்டரும், சென்னை டிஜிபி அலுவலகம் 18 சென்டி மீட்டரும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 14 சென்டி மீட்டரும், செங்குன்றத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.