தமிழக காவல்துறையில் கடந்த 9 மாதங்களில் 238 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்கொலை, கொரோனா உள்ளிட்ட காரணங்களினால் இந்த மரணங்கள் நிகழ்ந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் ஒரு லட்சம் போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து காவல்துறையில் மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த நிலையில் அண்மையில் காவல்துறையில் பணி சுமை அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களினால் உயிர் இழப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி வரை 238 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு காரணங்களினால் 37 காவலர்கள் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பால் 35 பேர் இறந்துள்ளனர். இதுதவிர விபத்துகள், உடல்நலக்குறைவு, தற்கொலை உள்ளிட்ட காரணங்களினால் காவலர் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது.