Categories
உலக செய்திகள்

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள்…. செய்தி தொடர்பாளரை சுட்டுக் கொன்ற சம்பவம்…. வெளியான தகவல்….!!

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களை பஞ்ஷீர் பள்ளத்தாக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள் என்று தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்ட தேசிய கிளர்ச்சி படையினர்களின் செய்தி தொடர்பாளரை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளார்கள் என்னும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை மட்டும் கைப்பற்ற முடியாமல் இருந்துள்ளது. ஆகையினால் ஆப்கானிஸ்தான் நாட்டின் துணை அதிபர் தலைமையில் தேசிய கிளர்ச்சி படைகள் தலிபான்களுக்கு எதிராக பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல் குறிப்பிட்டுள்ள இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல் நிலவி வந்துள்ளது. அவ்வாறு நடைபெற்ற மோதலின் விளைவாக தலிபான்கள் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றியுள்ளார்கள். இதற்கிடையே பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்ட தலிபான்களுக்கு எதிரான படைகளின் செய்தி தொடர்பாளர் தனது இணையதள பக்கத்தில் தலிபான்கள் அவ்விடத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேசிய கிளர்ச்சி படையின் செய்தித் தொடர்பாளர் தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது அதாவது தலிபான்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றுவதற்காக தேசியக் கிளர்ச்சி படைகளின் மீது நடத்திய தாக்குதலில் அவர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |