சமூக வலைத்தளங்களில் ‘1YearOfMasterSelfie’ என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர் . கடந்த வருடம் நெய்வேலியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது . அப்போது விசாரணைக்காக நெய்வேலி படப்பிடிப்பிலிருந்து விஜய் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் . வருமான வரி சோதனை முடிந்த பின்னர் அவர் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் . இந்த சம்பவத்திற்கு பிறகு நடிகர் விஜய்யை பார்க்க அவரது ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.
அப்போது நடிகர் விஜய் படப்பிடிப்புத் தளத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வேன் மீது ஏறி தனது ரசிகர்கள் கூட்டத்துடன் செல்பி எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டார் . இதையடுத்து அந்த செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் இது கடந்த வருடம் அதிகம் ரீ ட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்ற பெருமையையும் பெற்றது. இந்நிலையில் இன்றுடன் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஆனதை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . அதோடு ‘1YearOfMasterSelfie’ என்ற ஹேஸ்டேக்கையும் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .