தல அஜித் வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது. அதனைப் போல பீஸ்ட் படத்தை தொடர்ந்து வாரிசு படத்தில் விஜயின் நடித்துள்ளார். வம்சி பைடிபல்லி இயக்கி உள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம் , யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி சூப்பர் ஹிடானது.
இந்த படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் மோதிக்கொள்ளவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படங்களின் ரிலீஸ் குறித்து உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், அஜித் ‘துணிவு’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மட்டுமே நாங்கள் பெற்றுள்ளோம். இந்த படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை என்றாலும் இந்த படம் மிக சிறப்பாக வந்திருக்கும் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும் வாரிசுப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை நாங்கள் வாங்கவில்லை. ஆனால் வாரிசு படம் வெற்றியடைய விஜய் அண்ணா மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.