டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு நடிகை மாளவிகா மோகனன் பதில் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர்கள் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர் . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் . நாளை திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது . இந்த படத்தைக் காண ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆவலில் உள்ளனர்.
Vijay Sir calls me Malu! ☺️ https://t.co/KXFg7fHUPG
— Malavika Mohanan (@MalavikaM_) January 11, 2021
இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் . அதில் ஒருவர் ‘தளபதி விஜய் உங்களை எப்படி அழைப்பார் ?’என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன் ‘விஜய் சார் என்னை மாலு என அழைப்பார்’ என்று கூறியுள்ளார் .