தமிழ் சினிமாவில் மாநகரம் இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாக ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 படத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மூன்று பெரிய நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி கேஜி பட வில்லன் சஞ்சய் சத், அர்ஜுன், பிரிதிவிராஜ் ஆகியோர்கள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும் கௌத மேனன் மிஷ்கினிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தளபதி 67 படத்திற்காக பிரித்விராஜிடம் தொடர்ச்சியாக 60 நாட்கள் ஒரே கெட்டப்பை மெயின்டெயின் பண்ண வேண்டும் என்று கூறப்பட்டதாம். ஆனால் பிரித்திவிராஜ் நிறைய படங்களில் கமிடாகியுள்ளதால் தொடர்ச்சியாக 60 நாட்கள் தேதி கொடுக்க முடியவில்லை. இதனால் பிரித்விராஜ் தளபதி 67 படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.