ராமநாதபுரம் மாவட்டத்தில் ரஜினியின் உடல் நலம் பூரண குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
ரஜினிகாந்த் தன் உடல் நலம் சீராக இல்லாத காரணத்தால் அரசியலுக்கு நான் வரவில்லை என்று சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனைக் கேட்ட அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் எம்ஜிஆர் நகரில் உள்ள கோவிலில் ரஜினி ரசிகர்களும், நரிக்குறவர் சமுதாய மக்களும் சேர்ந்து ரஜினியின் ஆரோக்கியத்திற்காக சிறப்பு வழிபாடுகளை செய்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.