சண்டைக்கோழி படத்தை நடிகர் விஜய் மறுத்துவிட்டதாக அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால், ராஜ்கிரன் உள்ளிட்டோரின் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகி சரித்திர வெற்றியை கொடுத்த திரைப்படம் சண்டைக்கோழி. விஷாலின் சினிமா வெற்றிப் பயணத்திற்கு இந்த திரைப்படம் தான் மையப்புள்ளியாக இருந்துள்ளது. இந்தப் படத்தை நடிகர் சூர்யா அல்லது விஜய் இருவரில் ஒருவரை வைத்து இயக்கலாம் என நினைத்து இருவரிடமும் கதையை கொண்டு சேர்க்க நினைத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் சில காரணங்களால் சூர்யாவை வைத்து இயக்க முடியாமல் போக,
தளபதிவிஜயிடம் சென்று கதையை கூறினாராம். அப்போது முதல் பகுதி ஓகே இரண்டாவது பகுதி ராஜ்கிரண் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருப்பதால் இந்தப் படம் நாம் இணைந்து செய்ய வேண்டாம் என விஜய் கதையை மறுத்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து படத்தின் வெற்றி விழாவிற்கு நடிகர் விஜய்யை அழைத்து பேச விட்ட சமயத்தில் விஜய் படம் அருமையாக இருக்கிறது என்று பாராட்டிய போது,
இது நீங்கள் நடிக்க வேண்டிய படம் என்று இயக்குனர் லிங்குசாமி கூறியதற்கு, இதற்கு விஷால் தான் மிகச் சரியாக இருப்பார் என்றும் தெரிவித்திருந்தார். அதன் பின்பு பல படங்களில் விஜய்யை வைத்து இயக்க முற்பட்ட போதிலும், தற்போது வரை கால்ஷீட் கிடைக்காமல் தவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.