தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றர். இந்நிலையில் துணிவு-வாரிசு படங்களைபோன்று ஒரே நாளில் ரிலீஸ் ஆன அஜித் மற்றும் விஜய் படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். கடந்த 1996-ம் ஆண்டு முதன் முறையாக அஜித் மற்றும் விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. அதன்படி விஜய் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை மற்றும் அஜித் நடித்த வான்மதி ஜனவரி 12-ம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் 2 படங்களும் வெற்றி படைத்தது.
கடந்த 1996-ம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி விஜய் நடித்த பூவே உனக்காக மற்றும் அஜித் நடித்த கல்லூரி வாசல் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் பூவே உனக்காக சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் கல்லூரி வாசல் திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. கடந்த 1997-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி நடிகர் அஜித்தின் ரெட்டை ஜடை வயசு மற்றும் நடிகர் விஜயின் காதலுக்கு மரியாதை திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் காதலுக்கு மரியாதை சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் ரெட்டை ஜடை வயசு பெரிதாக ஓடவில்லை. கடந்த 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தளபதி விஜய் நடித்த நிலாவே வா மற்றும் அஜித் நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது.
இதில் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், நிலாவே வா திரைப்படம் பெரிய அளவில் ஓடவில்லை. கடந்த 1999-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி விஜயின் துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் அஜித்தின் உன்னை தேடி திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 2000-ம் ஆண்டு மே 19-ம் தேதி நடிகர் விஜய்யின் குஷி மற்றும் அஜித்தின் உன்னைக் கொடு என்னை தருவேன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் குஷி சூப்பர் ஹிட் ஆக உன்னை கொடு என்னை தருவேன் படம் பெரிய அளவில் ஓடவில்லை. கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி நடிகர் விஜய்யின் ஃபிரண்ட்ஸ் மற்றும் நடிகர் அஜித்தின் தீனா ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது.
கடந்த 2002-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி நடிகர் விஜய்யின் பகவதி மற்றும் அஜித்தின் வில்லன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2003-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி நடிகர் அஜித்தின் ஆஞ்சநேயா மற்றும் அஜித்தின் திருமலை ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் திருமலை சூப்பர் ஹிட் ஆக ஆஞ்சநேயா பெரிய அளவில் ஓடவில்லை. கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி அஜித்தின் பரமசிவன் ரிலீஸ் ஆக, நவம்பர் 15-ம் தேதி விஜயின் ஆதி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதில் பரமசிவன் திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் ஆதி திரைப்படம் தோல்வியை தழுவியது.
கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி நடிகர் விஜயின் போக்கிரி மற்றும் நடிகர் அஜித்தின் ஆழ்வார் திரைப்படங்கள் ரிலீஸ் ஆன நிலையில், போக்கிரி சூப்பர் ஹிட் ஆக ஆழ்வார் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி நடிகர் விஜய்யின் ஜில்லா ரிலீஸ் ஆக, ஜனவரி 10-ம் தேதி வீரம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த 2 படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேற்கண்ட படங்கள் எல்லாம் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி வெற்றி மற்றும் தோல்வியை சந்தித்த நிலையில் அடுத்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது. மேலும் இந்த படங்களுக்காக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.