Categories
சினிமா தமிழ் சினிமா

“புதிய சொல் பொருள் அஜீத்தி =அசத்தி”…. தல அஜித் பற்றி நடிகர் பார்த்திபன் போட்ட திடீர் டுவிட் பதிவு…..!!!!!!

கடந்த 1989 ஆம் வருடம் புதிய பாதை திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். இதையடுத்து பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே உட்பட பல படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்துகொண்டார். இவர் இறுதியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக் கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் எனும் பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அஜித் பற்றி பார்த்திபன் தன் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “வேள்பாரி யாரோ? வாள் பாரி நானே. ஆயிரத்தில் ஒருவனும், பொன்னியின் செல்வனும் எனக்கொரு ராஜ கம்பீரத்தை தந்திருப்பதும், சுழல் சூழ் வரவேற்பும், இரவின் நிழல் இளைய இதயங்களை லயமாக என் வயப்படுத்தி இருப்பதும் நுங்கும் நுரையுமாய் பொங்கி வழியும் நிறைவே. குண்டும் குழியுமாய் இருந்த என் பாதைகள் செப்பனிடப்பட்டு(dieting +workouts) புது பாதைக்கு மீண்டும் தயாராகி வருகிறேன்.

வெட்டவெளிதனில் நட்ட கருங்கல்லா நகராமல் நின்றுவிட, கடிகார முட்கள் jagging செல்லும்போது எதிர்திசையில் நகர்ந்துக் கொண்டிருக்கும் இலையுதிர் மரங்களே இருந்தால் சீவி சிங்காரித்துக்கொள்வதும், கொட்டிவிட்டால் மயிரே போச்சி என Chilla chilla பாடியே (நரையைக் கூட மைப்பூசி மறைக்காமல் திரை கிழியும் விசிலுடன் அஜீத்தி) துணிவுடன் நாளை எதிர்கொள்வதுமே வாழ்வின் இன்பம் பொங்கல்.  புதிய சொல்பொருள் அஜீத்தி = அசத்தி” என பதிவிட்டு உள்ளார்.

Categories

Tech |