தைவான கைப்பற்றுவதற்காக படை பலத்தை உபயோகப்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று சீனா அதிபர் தெரிவித்துள்ளார்.
சீனா தைவானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக பெருமுயற்சி எடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோசமான சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து சீனா கிரேட் ஹால்லில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றியுள்ளார். அதில் ” தைவானுடன் சீனா மிகவும் அமைதியான முறையில் ஒன்றிணைய விருப்பம் தெரிவிக்கிறது. ஆனால் ஒன்றிணைவதற்கு தைவானின் சுதந்திர பிரிவினைவாதம் பெரும் தடையாக உள்ளது. மேலும் சீனா தனது இறையாண்மையையும் ஒற்றுமையும் பாதுகாக்கும். குறிப்பாக தாய்நாட்டின் அனைத்து ஒருங்கிணைந்த பகுதிகளையும் இணைக்கும் பணியை நிறைவு செய்ய வேண்டும். இது கட்டாயமாக நடைபெறும்” என்று உறுதி தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு முன்னதாகவே இந்த விவகாரம் தொடர்பாக தைவானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வூ கூறியதில் “சீனா பகல் கனவு காண்கிறது. குறிப்பாக தலீபான்களின் அடக்குமுறையை சீனா பின்பற்ற விரும்புகிறது. ஆனால் நாங்கள் எங்களைப் காத்துக் கொள்வோம்” என்று கூறியுள்ளார். மேலும் கடந்த சில மாதங்களாக சீனாவின் அடக்குமுறை குறித்து தைவான் குற்றம்சாட்டி வருகிறது. அதிலும் சீனாவில் கடந்த 1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப்போருக்கு பின்னர் தான் தைவான் உருவாகியது. இதனால் சீனா தைவான் தனது ஒருங்கிணைந்த பகுதி என்று கூறிவருகிறது.
ஒருவேளை தேவை ஏற்பட்டால் தைவானை ஆக்கிரமிப்பு செய்ய படைபலத்தை உபயோகப்படுத்த தயங்கமாட்டோம் என்று சீனா அதிபர் ஜி ஜின்பிங் சில மாதங்களுக்கு முன்பு கூறியது அனைவரிடத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக சீனா அண்மையில் தைவானை சுற்றி போர் பயிற்சி மையங்களை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 18 மற்றும் 19ம் தேதிகளில் சுமார் 40 போர் விமானங்கள் சீனாவிலிருந்து அனுப்பப்பட்டு தைவான் எல்லையை கடந்தது. இதன் மூலம் சீனா தைவானிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அதிபர் சாய் இங்-வென் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.