Categories
உலக செய்திகள்

தைவான் எல்லை பிரச்சினை…. அமைச்சர்கள் பேச்சுவார்த்தை…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!

தைவான் சீனா எல்லை பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அரசு சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனா மற்றும் தைவான் இடையே உள்ள எல்லை பிரச்சினை தொடர்ந்து நீடித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், தைவான் நாட்டுக்கு இராணுவ ரீதியாகவும் சீனா கடும் அழுத்தங்களை அளிப்பதாக கூறப்படுகிறது.

தற்போது, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரோம் நகரில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் மற்றும் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்-யீ நேரில் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்தது.

இதனை தொடர்ந்து, “தைவான் எல்லை பிரச்சினைகளில் தற்போது இருக்கும் நடைமுறையே நீடிக்க வேண்டும். மேலும், அதனை மாற்ற முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, பதற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சீனாவுக்கு கடும் பதிலடி தரப்படும்” என்றும் அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |