Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

தொட்டதெல்லாம் துலங்கும்… கணவன்- மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்… தைப்பூச திருநாளின் சிறப்புகள்…!!

தைப்பூச திருநாளின் சிறப்புகள்:

முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூச விரதமே முதன்மையாக கருதப்படுகிறது. தைப்பூசம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் விசேஷமானது. தைப்பூசத்தன்று தான் உலகத்தின் முதல் உயிர்ப்பு சக்தியான தண்ணீர் சிவபெருமானால் தோன்றியது.  தண்ணீரின் தொடர்ச்சியாக நிலம்,ஆகாயம், நெருப்பு,காற்று ஆகியவையும் அடுத்தடுத்து அனைத்து உயிரினங்களும் தோற்றுவிக்கப்பட்டது.

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். தை மாத பௌர்ணமியும், பூசம் நட்சத்திரமும் கூடி வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வது தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும். வாயு பகவானும், வருண பகவானும், சனி பகவானும் ஈசனின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகிறது.

இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவன் இருக்கிறான் என்று உணர்த்தப்பட்ட புண்ணிய நாள்  இந்த தைப்பூச நன்னாள் ஆகும். தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும், பிரியாத வரத்தை பெறலாம். தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்ற ஒரு பழமொழி உண்டு.

Categories

Tech |