Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சதி வேலையா இருக்கலாம்…. பற்றி எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி….!!

தைலமர தோப்பில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊரணிபுரம் கல்லணை கால்வாய் அருகே முனியன், ரேவதி, சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான தைலமர தோப்பு உள்ளது. இந்நிலையில் இந்த தோப்பில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் திரண்டு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை விரல்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஒரு ஏக்கர் பரப்பிலான தைல மரங்கள் தீயில் முழுவதுமாக எரிந்து நாசமாகின. இந்நிலையில் தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகே பற்றி எரிந்த தீயானது கட்டுக்குள் வந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பகுதியில் மது அருந்த வந்தவர்கள் தீவைத்து சதி வேலையில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |