Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மீள முடியாத துயரம்”… தாயும் மகளும் ஒரே சேலையில்… கள்ளக்குறிச்சி அருகே நேர்ந்த சோகம்..!!

கள்ளக்குறிச்சி அருகே தாய்-மகள் தற்கொலை  கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பாலமுருகன்-லலிதா. லலிதா அழகுக் கலை நிபுணராக பணியாற்றி வந்தார் . இவர்களது  மகள் 18 வயதுடைய  தர்ஷினி .இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில்  படித்து வந்தார்.  பாலமுருகன்  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக உயிரிழந்தார்.  பாலமுருகனின் இறப்பிலிருந்து அவருடைய மனைவியும் மகளும் மீள முடியாமல் தவித்துள்ளனர் .

இந்நிலையில்  லலிதாவும் தர்ஷினியும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர் .இதனை பார்த்த உறவினர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர் . இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories

Tech |