ஆட்டோ டிரைவரை மண்வெட்டியால் தாக்கிய மற்றொரு ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நொச்சிகுளம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோவில் டிரைவராக உள்ளார். இந்நிலையில் தோணித்துறை பேருந்து நிறுத்தத்தில் தனது ஆட்டோவில் ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சீவலப்பேரி பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான சண்முகதுரை செல்வகுமாரிடம் நீ எப்படி ஆட்களை ஏற்றலாம் என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து தகாறு முற்றியதில் கோபமடைந்த சன்முகதுரை செல்வகுமாரை மண்வெட்டியால் தாக்கினார். இதனால் செல்வகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து செல்வகுமார் சீவலப்பேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சன்முகதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.