அமெரிக்காவில் கொரோனா கட்டுப்படுத்த மக்கள் முதலில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசியின் தேவை அதிகரித்து வருகிறது .கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகவுள்ளது. இந்த ஏற்றுமதி தடையை நீக்குவதற்கு இந்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது எனக் கூறி தடையை அமெரிக்கா நியாயப்படுத்தியிருக்கிறது. கொரோனாவால் பாதிப்படைந்த நாடுகளில் முன்னிலையில் இருப்பது அமெரிக்கா தான் எனவே அமெரிக்க மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிற நாட்டிற்கு கொரோனா பரவாது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் அறிவித்துள்ளார்.