கொரோனா தடுப்பூசி இருப்பு தீர்ந்து விட்டதால் வந்ததும் பொதுமக்களுக்கு செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, நகர்புற சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து மாவட்டத்தில் கடந்த மாதம் வந்த 7 ஆயிரம் கோவிசில்டு தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதால் பணி நிறுத்தப்பட்டு முகாம்களில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது.
ஆனால் அதை அறியாமல் பொதுமக்கள் சிலர் தடுப்பூசி செலுத்துவதற்காக வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதனால் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்திற்கு ஓரிரு நாட்களில் 20 ஆயிரம் தடுப்பூசிகள் வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே தடுப்பூசிகள் வந்தவுடன் சிறப்பு முகாம்கள் நடைபெற்று பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு தகவல் கொடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.