Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கனும்…. தடுப்பூசி பணிகள் தீவிரம்…. கேட்டுக்கொண்ட உலக சுகாதார அமைப்பு….!!

சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என  உலக சுகாதார அமைப்பு சர்வதேச நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை உலகம் முழுவதிலும் 1.15 லட்சம் சுகாதார பணியாளர்கள் கொரோனாவால் உயிரிழந்து இருப்பதாக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறியதாவது “ஒவ்வொரு சுகாதார அமைப்பின் முதுகெலும்பும் அவற்றின் பணியாளர்களாக இருக்கின்றனர். மேலும் நம் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அனைவரும் சார்ந்திருக்கும் சேவைகளை இவர்களே வழங்குகிறார்கள்.

அதுமட்டுமின்றி நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மக்கள் தங்களை பாதுகாப்பற்றவர்களாக உணரும் போது அனைவரும் பாதிக்கப்படுகிறோம் என்று தெரிவித்தார். இதில் உலக அளவில் சராசரியாக 5 சுகாதாரப் பணியாளர்களில் ஒருவர் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக 119 நாடுகளின் தரவுகள் தெரிவிக்கிறது. ஆனால் பிராந்தியங்கள் மற்றும் பொருளாதார குழுக்களுக்கிடையே பெரிய வேறுபாடுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே தடுப்பூசியின் பணிகளில் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |