Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி முகாமில் திடீர் ஆய்வு…. கேரள மக்களுக்கு இது கட்டாயம்…. சுகாதார அமைச்சர் கூறிய தகவல்….!!

தமிழகம் முழுவதும் இன்று நான்காவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை  தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தபடும் பணி நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று குறையாத காரணத்தினால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்க்கு வரும் மக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவை அவர்களிடம் இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் கேரளாவில் தற்போது நிபா மற்றும் ஜிகா வைரஸ் பரவலை தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதனிடையில் தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சி பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய இடங்களில் கொசுக்களை  ஒழிப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதாவது டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.

Categories

Tech |