இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசியை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சுமார் 2,50,000 தடுப்பூசிகளை அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான அனாக்னி ஆலையத்திலிருந்து அனுப்புமாறு ஆஸ்ட்ரோஜெனேகா நிறுவனம் இத்தாலி அரசுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் இந்த கோரிக்கைக்கு இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது .இந்த முடிவிற்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவு அளித்துள்ளது .
அதற்கு காரணம் ஐரோப்பிய ஒன்றியம் போட்ட ஒப்பந்தத்தை ஆஸ்ட்ரோஜெனேகா நிறுவனம் பூர்த்தி செய்யாததால் மறுப்பு தெரிவித்ததாக ஐரோப்பிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.