Categories
உலக செய்திகள்

சொன்ன வாக்கை காப்பாற்றிய போரிஸ் ஜான்சன்… “அந்த நிறுவனத்தின் ” தடுப்பூசியை போட்டுக் கொண்டார்…!!

 Covid-19 தடுப்பூசியின் 1 டோஸ் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் பிரிட்டன் பிரதமருக்கு போடப்பட்டது.

Covid-19 என்னும் கொடிய வைரசால் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் Oxford University  – Astrazeneca நிறுவனத்துடன் இணைந்து Covid-19-க்கு எதிராக தயாரித்த தடுப்பூசி ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவை ஏற்படுத்துகிறது என்று பல புகார்கள் எழுந்தது.

இதற்கிடையில் போரிஸ் ஜான்சனுக்கு செயின்ட்.தாமஸ் மருத்துவமனையில் Astrazeneca நிறுவனத்தின் Covid-19-ஐ தடுக்க கூடிய தடுப்பூசியின் 1 டோஸ் போடப்பட்டது.  இதற்கு முன்பு அவர் இந்த நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்திக் கொள்வேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அவர் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பிறகு தனது இரண்டு கைகளின் பெரு விரல்களையும் உயர்த்தி காட்டியுள்ளார்.

தற்போது பிரிட்டனில் 26.2 மில்லியன் குடிமக்களுக்கு Oxford University  – Astrazeneca நிறுவனத்தின் தடுப்பூசியின் முதல் டோஸ்  செலுத்தப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் வசிக்கும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையில் பாதி தான். மேலும் 2 மில்லியன் மக்கள் Covid-19  தடுப்பூசியின் 2 டோஸ்களையும்  பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Categories

Tech |