Categories
உலக செய்திகள்

முதலில் நாங்க தான் போடுவோம்..! அதுக்கு அப்புறம் தான் உங்களுக்கு தருவோம்..! தடுப்பூசி ஏற்றுமதியில் நிபந்தனை விதித்த பிரிட்டன்…!!

ஐரோப்பிய நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது  குறித்து பிரிட்டன் அதிரடி நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. 

உலக நாடுகளை உலுக்கி வந்த கொரானா வைரஸை தடுக்கும் விதமாக அனைத்து நாடுகளும் தற்போது தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் அரசு எங்களுடைய கொரோனோ தடுப்பூசி செலுத்தும்  திட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு தடுப்பூசியை கொடுக்க முடியும் என்று ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. இதனால் பிரிட்டன் அரசு கொரோனா  வைரஸை எப்படியாவது கட்டுப்படுத்திவிட வேண்டும் என்று பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது .

அதன் காரணமாக பிரிட்டனில் தற்போது தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனின் சர்வதேச  வர்த்தகத்துறை அமைச்சர் Liz Truss கூறியதாவது, “தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக 36 கோடி தடுப்பூசிகளை கேட்டுள்ளோம். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விநியோகத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் பிரிட்டன் அரசு இணைந்து செயல்படும் என்று தடுப்பூசி துறை அதிகாரி நதீம் ஸஹாவி கூறியது உண்மைதான்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்ட இடங்களில் வாழும் மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இதற்கிடையில் தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து தடுப்பு மருந்துகளை உரிய நேரத்தில் பெறும் போதே பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே பிரிட்டன் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால் தான்  ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய முடியும்” என்று கூறியுள்ளார் .

Categories

Tech |