Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தடையை மீறி ஊர்வலம்…. 14 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் நடவடிக்கை….!!

தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற 14 பேர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பாக முத்தையாபுரம் பகுதியில் 300 வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் செல்வ விநாயகர் ஆலயத்தில் வைத்து பூஜை செய்த சிலைகளை கரைப்பதற்காக கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர் .இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் காவல்துறையினர் அவர்களை வழிமறித்தனர். இதனையடுத்து நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில், காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தனித்தனியாக சிலையை கடலில் கரைப்பதற்கு அறிவுரை வழங்கினர்.

அதன்பின் காவல்துறையினரின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு இந்து முன்னணி மாவட்ட பேச்சாளர் ஆறுமுகம் தலைமையில் அனைவரும் தனித்தனியாக கலைந்து சென்று விநாயகர் சிலைகளை கடலில் கரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்து வியாபாரிகள் சங்க மாநில தலைவர் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் மாவட்ட செயலாளர் மாதவன், தெற்கு மண்டல பொதுச்செயலாளர் சுரேஷ் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இவ்வாறு கொரோனா காலகட்டத்தில் தடையை மீறி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயற்சி செய்ததாக 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Categories

Tech |