Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லா தடைகளையும் தாண்டி செல்வோம்… ஸ்டாலின் அதிரடி டுவிட்…!!!

தடைகளை உடைத்து திமுக மக்களை சந்திக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். ஊரக வளர்ச்சி துறை செயலர் அரசியல் நோக்கத்துடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கிராம சபை கூட்டம் விவகாரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக அரசு மக்கள் கிராமசபை கூட்டங்களில் ஏழும் முழக்கங்களை கேட்டு பதறுகிறது. கார்த்திக், ஆர்.ராதா கிருஷ்ணன், செல்வராஜ், திராவிடமணி, கைது!

கோவையின் சூப்பர் முதல்வர் வேலுமணி மிரட்டல்களால் திமுகவை தடுக்கமுடியாது; தடைகளை உடைத்து மக்கள் சந்திப்பு தொடரும். என்று பதிவில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |