தலீபான்களுக்கு பயந்து இராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து தலீபான்கள் அந்நாட்டை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆப்கான் எல்லைப்குதிகளை கைப்பற்றுதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையேயுள்ள எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தலீபான்களின் வன்முறை செயலுக்கு அஞ்சி ஆப்கானைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் முக்கியமாக 5 ராணுவ அதிகாரிகள் மற்றும் 41 வீரர்கள் பாகிஸ்தானில் அடைக்கலம் கோரியுள்ளனர். மேலும் ராணுவ விதிமுறைகள் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் பாகிஸ்தான் அரசு அளித்துள்ளது.