Categories
உலக செய்திகள்

தலைவிரித்தாடும் பயங்கரவாதிகளின் தாக்குதல்…. சம்பவ இடத்திலேயே பலியான சோகம்…. குற்றச்சாட்டை முன்வைத்த பிரதமர்….!!

பயங்கரவாதி ஒருவர் உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்த தோடு மட்டுமின்றி அதனை வெடிக்கச் செய்ததில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோமாலியா நாட்டில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சோமாலியாவின் தலைநகரான மோகாதிசுவில் ஏராளமான பொதுமக்கள் அமர்ந்து ஹோட்டல் ஒன்றில் உணவை உண்டு கொண்டிருந்துள்ளார்கள்.

அப்போது திடீரென ஹோட்டலுக்குள் பயங்கரவாதி ஒருவர் புகுந்துள்ளார். இதனையடுத்து அவர் உடல் முழுவதும் கட்டி வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெடி குண்டுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் ஹோட்டலில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள்.

இந்த தாக்குதலுக்கு எந்த வித அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் அந்நாட்டின் பிரதமர் இந்த பயங்கர தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாதிகளே காரணமென்று குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |