Categories
தேசிய செய்திகள்

TET தேர்வு ஒத்திவைப்பு?…. குழம்பும் தேர்வர்கள்…. மாநில கல்வி அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!!

கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டம் முடித்த பட்டதாரிகள் அனைவருக்கும் அம்மாநில அரசால் நடத்தப்படும் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அவ்வகையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் டெட் தேர்வு வருகின்ற ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியது. அதே நாளில் RRB தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் வருவதால், இது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் டெட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என அமைச்சர் கே.டி.ஆரிடம் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என கல்வி அமைச்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், டெட் தேர்வை ஒத்தி வைக்க முடியாது,மற்ற போட்டித் தேர்வுகள் உடன் எந்த தொந்தரவும் இல்லாமல் மாநிலத்தில் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மற்ற போட்டித்தேர்வுகள் உடன் ஒத்துப் போகாமல் அனைத்து தேர்வு தேதிகளும் மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எனவே டெட் தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

மேலும் தேர்வுகள் ஒத்தி வைக்கப் படுவது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்,தேர்வு அட்டவணை மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் டெட் தேர்வு நடத்துவதற்கான தேர்வு மையங்களையும் அரசு உறுதி செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தாள் ஒன்றுக்கு 1480 மையங்களும், தாள் 2 க்கு 1171 மையங்களும் அமைக்கப்படுகின்றது.ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இந்த TET தேர்வு நடத்தப்படும் நிலையில், B.ed தேர்வர்களுக்கு தாள்-1 எழுத அரசு அனுமதி அளித்துள்ளது.

Categories

Tech |