Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் ….! முகமது ஷமி வரலாற்று சாதனை …..!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வரலாற்று சாதனை படைத்துள்ளார் .

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்தப் போட்டிக்கு முன்பு வரை  54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 195 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இந்நிலையில் நேற்று நடந்த முதல் இன்னிங்ஸில் முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலமாக 200 விக்கெட் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 200 விக்கெட் கைப்பற்றிய 11-வது இந்திய பவுலர் என்ற சாதனை படைத்துள்ளார் .அதோடு வேகப்பந்து வீச்சாளராக 200 விக்கெட் கைப்பற்றிய 5-வது இந்திய பலர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.இதில் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்  கைப்பற்றிய முதல் இந்திய பவுலர் என்ற பெருமையை பெற்றுள்ளார் .இதில் முகமது ஷமி  9896 பந்துகளில் 200 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக தமிழக வீரர் அஸ்வின் 10248  பந்துகளில் 200 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |