Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” ரூ1,000….. மே மாதம் டெஸ்ட்….. அக்டோபர் மாதம் SALE…!!

மே மாதம் கொரோனாவுக்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை மனிதர்கள் மீது பயன்படுத்த உள்ளதாக செரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில்,

இந்தியாவில் உள்ள செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம், ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்துடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக சமீபத்தில் தெரிவித்தது.

  இதனை மே மாதம் இந்தியாவில் மனிதர்கள் மீது பயன்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும், அக்டோபரில் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கான விலையை ரூ 1000 என நிர்ணயித்து விற்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |