நாளை முதல் மீன்பிடிக்க செல்ல தயாராகும் மீனவர்கள் டீசல் விலையை குறைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
அரபிக் கடலில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் மீன்பிடிக்க செல்ல கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் முட்டம், குளச்சல் முதல் கேரளா, குஜராத் உள்ள அரபிக்கடலில் கடந்த ஜுன் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்ல விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
குளச்சல் துறைமுகத்தில் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் விசைப் படகுகளில் வலைகள், ஐஸ் உள்ளிட்டவற்றைக் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வால் மீன் விற்பனையில் அதிக வருவாய் கிடைக்காது என்பதால் டீசல் விலையை குறைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.