Categories
உலக செய்திகள்

உலகில் எங்கு பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும்… பாகிஸ்தானிற்கு தொடர்பு இருக்கும்… மதுசூதனன் அதிரடி…!!!

ஐநா.விற்கான இந்திய நிரந்தர ஆலோசகரான மதுசூதன், பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆயுதங்களின் நடுவில், “மக்களுக்கான பாதுகாப்பு, நகரங்களில் போர்- நகர்ப்புற அமைப்புகளில் மக்களின் பாதுகாப்பு’” என்பது தொடர்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது, ஐநாவிற்கான பாகிஸ்தான் நாட்டின் நிரந்தர தூதரான முனீர் அக்ரம், ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை தூண்டக்கூடிய விதத்தில் கருத்து கூறினார்.

உடனே, ஐநா.விற்கான இந்திய நிரந்தர ஆலோசகரான மதுசூதன், பயங்கரவாத செயல்களுக்கு  நிதி, ஆதரவு மற்றும் இடம் வழங்குவதில் பாகிஸ்தான் வரலாறு படைத்திருக்கிறது என்பதை,  உறுப்பினர் நாடுகளும் நன்றாக அறியும்.

உலகில் இருக்கும் எந்த ஒரு மூலையில் பயங்கரவாத்த தாக்குதல் நடந்திருக்கிறது, என்றாலும் அதில் பாகிஸ்தானிற்கு தொடர்பு இருக்கிறது. உலகில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஏதோ ஒரு வகையில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கும், என்று தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்.

Categories

Tech |