ஐ.எஸ்., ஐ.எஸ். பயங்கர அமைப்பின் தலைவரும், அமெரிக்க ராணுவப் படையால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியுமான பாக்தாதியின் சகோதரி கைது செய்யப்பட்டார்.
ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள சிரியாவின் முக்கியப் பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய படைகள் களம் கண்டன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அமைப்பின் தலைவர், அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த நிலையில் அவரின் சகோதரி 65 வயதான ராஸ்மியாவை துருக்கி பாதுகாப்புப் படையினர் சிரியாவில் கைது செய்தனர். சிரியாவின் வடக்குப் பகுதியான அலெப்போ மாகாணத்திலுள்ள ஆசஸ் என்ற பகுதியில் அவர் தனது கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இவரின் கைது பல ரகசிய தகவல்களை அம்பலமாக்கும் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க துருப்புக்களின் அதிரடி நடவடிக்கையின் போது ஐ.எஸ். பயங்கரவாத தலைவன் பாக்தாதி கொல்லப்பட்டார் என்று அறிவித்திருந்தார்.இதற்குப் பதிலளித்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர், ’அமெரிக்க ராணுவத்தால் பாக்தாதி முழுமையாக அழிக்கப்பட்டதாக நம்பகமான தகவல்கள் எதுவும் எங்களிடம் இல்லை என்று தெரிவித்திருந்தார்’ என்பது நினைவுகூரத்தக்கது.