Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்… 4 பேர் உயிரிழப்பு…!!!

காஷ்மீரில் இன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீரில் உள்ள சோபோர் என்ற மாவட்டத்தில் அரம்போரா என்ற பகுதியில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மற்றும் காவல் துறை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு காவலர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர்.

2 காவலர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகின்றது. மேலும் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் லக்ஷர் ஈ தொய்பா அமைப்பினர் இருப்பதாக காஷ்மீர் ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |