Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனா…! ஒரே நாளில் ”837 பேர் பலி” கண்ணீரில் இத்தாலி ..!!

இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் 837 பேர் உயிரிழந்துள்ளது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

Corona Virus Death Toll: कोरोना वायरस से चीन ...

நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 857,299 பேர் பாதித்துள்ளனர். 177,141  பேர் குணமடைந்த நிலையில் 42,114 பேர் உயிரிழந்துள்ளனர். 638,044 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 32,297 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

Deadly Coronavirus Death Toll Rising, Can Be Passed Before ...

 

கொரோனா வைரசால் தாக்கத்தால் நேற்று ஒரே நாளில்  மட்டும் 837 பேரை இழந்து கண்ணீரில் தவிக்கின்றது இத்தாலி. அங்கு கொரோனா  தொற்று பாதகிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 105,792 பேரில் 15,729 குணமடைந்த நிலையில் 77,635 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 12,428ஆக உயர்ந்த நிலையில் 4,023 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது.

Categories

Tech |