Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸின் ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவி காலம் நிறைவு.!!

மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களின் பதவி காலம் முடியவுள்ள நிலையில் அந்த வெற்றிடத்திற்கு மீண்டும் நியமிக்கப்படுவோர் குறித்த எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான  மோதிலால் வோரா, திக்விஜய்சிங்,  குமாரி சல்ஜா உட்பட 12 ராஜ்ய சபா உறுப்பினர்கள் ஏப்ரல் மாதத்துடன் ஓய்வு பெற இருக்கின்றனர். இந்த நிலையில்  ஆளுமையின் அடிப்படையில்  அவர்களுக்கு மீண்டும்  பதவி வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இது குறித்து கட்சியின் மாநிலங்களவை (ராஜ்யசபா) துணைத் தலைவர்  ஆனந்த் சர்மா கூறுகையில்  ”ராஜ்யசபா உறுப்பினர் பதவியிடங்கள் குறித்து  கட்சி தலைவர் தான் முடிவு செய்வார்”  எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுப்பறியான நிலை நீடித்து வருகின்ற நிலையில், ராஜ்ய சபா உறுப்பினர்களை  தேர்வு செய்வதிலும் சிக்கல் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |