இஸ்ரேல் நாடு, பாலஸ்தீனத்தில் உள்ள காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகங்கள் பலவும் காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டு வந்த நிலையில் இஸ்ரேல் நாடு அதனை தற்போது உறுதி செய்துள்ளது. அதாவது காசாவிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எரியூட்டும் பலூன்கள் பல அனுப்பப்பட்டதாகவும், அதனால் இஸ்ரேலின் பல பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல், காசாவில் உள்ள ஹமாஸ் குழு மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் போர் விமானங்கள் கடந்த புதன்கிழமை அன்று அதிகாலை காசா நகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
https://twitter.com/i/status/1404933379452194817
ஆனால் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மீபத் என்ற இடத்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் 21-ஆம் தேதி போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு பிரச்சினையும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டு நாடுகளும் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.