Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் …. அணியில் விகாரி இடம்பெறுவாரா ….?

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற  26-ம் தேதி தொடங்குகிறது .

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற  26-ம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில் முதல் டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் விகாரிக்கு வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது .

அதேசமயம் உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியதால் நிச்சயம் அவர் அணியில்  இடம்பெறலாம் என தெரிகின்றது .அதே சமயம் சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்த 2 பேரில் ஒருவரோ அல்லது இருவருமோ அணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |