திருச்செந்தூர் கோவிலில் தரிசன நேரத்தை நீட்டித்து தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் பகுதியில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக பக்தர்கள் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை சுவாமி தரிசனத்திற்காக காலை மணி 6 – மாலை மணி 6 வரை அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று முதல்(22.9.2021) பக்தர்கள் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம் என 3 மணிநேரம் நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதே சமயம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 கிழமைகளில் ஏற்கனவே இருக்கும் தரிசனத்தடை தொடரும் என சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.