தபால் மூலம் பழனி முருகன் கோவிலின் பிரசாதத்தை வீட்டிலிருந்தே பெற்று கொள்ள புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலைய முதல்நிலை அஞ்சல் அதிகாரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் தபால் துறையுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தின்படி கொரோனா காலகட்டங்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத காரணத்தால் தங்களது வீடுகளில் இருந்தே பழனி பஞ்சாமிர்தம், ராஜ அலங்கார திருவுருவப்படம், விபூதி போன்றவற்றை 250 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
அதாவது ஈரோடு மாவட்டத்தில் உள்ள காந்திஜி ஈரோட்டில் அமைந்திருக்கும் தலைமை தபால் நிலையத்திற்கு சென்று அங்கு வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து 250 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு செய்தால் பழனி பிரசாத பார்சல் தபால் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்குக் அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.