கோவில்களில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பழமலைநாதபுரம் பகுதியில் சக்திவாய்ந்த அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்மநபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் உள்ள பணத்தை திருடி சென்றுள்ளனர்.இதனையடுத்து மறுநாள் காலை கோவிலுக்குச் சென்ற பூசாரி பூட்டு உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது புதுக்குடி பகுதியில் வசிக்கும் 3 நபர்கள் உண்டியல் பணத்தை திருடி செல்லும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. இதனைதொடர்ந்து மர்மநபர்கள் மாரியம்மன் கோவிலிலும் உண்டியலை உடைத்து 15000 ரூபாயை திருடியது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதில் சம்பந்தப்பட்ட ஒருவரை கைது செய்துள்ளனர். அதோடு தப்பியோடிய இரண்டு பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்..