சர்வதேச கிரிகெட் கவுன்சில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பத்தாண்டுகளில் மிகச்சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியை எழுப்பியதற்கு, அதிகபடியான ரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயரையே கூறியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த பத்தாண்டுகளில் உலகின் தலைசிறந்த கேப்டன் யார்? என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் வைத்தது. அதற்கு சற்றும் தாமதிக்காமல் பல ரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பெயரைப் பதிவிட்டு ஆச்சரியபடுத்தியுள்ளனர்.
ஆனால் தோனி, 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெடிலிருந்து கேப்டனாக இருக்கும்போதே ஓய்வை அறிவித்தார், அதன்பின் 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் ஒருநாள், டி20 அணிகளிலிருந்து தனது கேப்டன் பதவியை ராஜினாம செய்தார். அதனையடுத்து அவர் ஒரு சாதாரண வீரராக இந்திய அணியில் அங்கம் வகித்தார். மேலும் அவர் தற்போது ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மட்டுமே செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஐசிசியின் கேள்விக்கு ரசிகர்கள் தோனியின் பெயரை பதிவிட்டு அவரின் கேப்டன் திறமைக்கு உரிதான மகுடத்தை சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் அவர் இந்திய ரசிகர்களால் மட்டும் இதனை செய்யவில்லை, குறிப்பாக அந்த ட்விட்டர் பதிவில் பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் ‘எம்.எஸ்.தோனிக்கு பாகிஸ்தானின் அன்பு மற்றும் மரியாதை’ எனவும் தெரிவித்துள்ளது அவரின் கேப்டன்ஷிப்புக்கான தரத்தை இந்த உலகிற்கு வெளிப்படுத்துகிறது.
இப்படி பல நாட்டு ரசிகர்களும் தோனியின் பெயரை உச்சரிப்பதற்கான காரணம், அவர் ஐசிசியால் நடத்தப்படும் ஒருநாள், டி20, சாம்பியன்ஸ் கோப்பைகளையும், உலகக் கோப்பையையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் என்பதினால் மட்டுமல்ல, அவர் இந்த விளையாட்டிற்கு கொடுத்த மரியாதையினாலும் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/Rainbow_pearl21/status/1209769485558616065